Advertisment

ஸ்ரீதேவியின் ரத்தத்தில் ஆல்கஹால்: தடயவியல் அறிக்கையில் திடுக் தகவல்!

sridevi

நடிகை ஸ்ரீதேவியின் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாக உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது. இதனால், ஸ்ரீதேவி மது அருந்தியதால் நிலைதடுமாறி குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

கடந்த 22-ம் தேதி துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த போனி கபூர் உறவினர் மோஹித் மார்வா திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன் கலந்து கொண்டார்.

Advertisment

இதையடுத்து, கடந்த சனிக்கிழமை இரவு ஸ்ரீதேவியின் உயிர் மாரடைப்பு காரணமாக பிரிந்ததாக போனி கபூர் தெரிவித்திருந்தார். ஸ்ரீதேவியின் பிரேதப்பரிசோதனை அறிக்கை மற்றும் தடவியல் அறிக்கை கிடைக்காததால் அவரது உடலை மும்பை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

report

இந்நிலையில், இன்று பிற்பகல் அவரது தடயவியல் அறிக்கை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும், அவரது மரணத்தில் சதிச்செயல்கள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், நடிகை ஸ்ரீதேவி மது அருந்தியதால் நிலைதடுமாறி குளியல் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கியதாகவும், அதனால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீ தேவியின் உடல் எப்போது துபாயில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் என துல்லியமான தகவல் இதுவரை வெளிவரவில்லை. எனினும், எம்பாமிங் முடிந்த பிறகு, பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு ஸ்ரீ தேவியின் உடல் இந்தியாவுக்கு அனுப்பப்படும் என தெரிகிறது.

sridevi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe