Advertisment

மது கடத்தல்: மடக்கிப்பிடித்த போலீஸ்..!

Alcohol smuggling; Wrapped up police ..!

புதுச்சேரியிலிருந்து கார் ஒன்று சீறிப்பாய்ந்து சென்றது. அதேநேரம் மரக்காணம் காவல்துறையினர் கிழக்குக் கடற்கரைச் சாலை கைப்பணி சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீறிப் பாய்ந்து வந்த அந்தக் காரை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். அந்தக் காரில் உயர்ந்த ரக வகை 50 பிராந்தி பாட்டில்கள், 70 பீர் பாட்டில்கள் ஆகியவை இருந்தன. அவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisment

தொடர்ந்து, காரை ஓட்டிவந்த ஓட்டுநரிடம் விசாரணை செய்தபோது அவர் புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த 35 வயது முருகன் என்பதும் இவர் இதேபோன்று அடிக்கடி புதுச்சேரியிலிருந்து காரில் மதுபாட்டில்களைக் கடத்திச் சென்று சென்னையில் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முருகனையும் அவர் கடத்தல் செய்ய பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை மரக்காணம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் மது பாட்டில்களின் மதிப்பு 3 லட்சம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisment

liquor
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe