Advertisment

பாட்டில் குடிநீரில் மது வாடையா?- ரயில் பயணிகள் குற்றச்சாட்டு

 Alcohol in drinking water?- Allegation of train passengers

சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் சென்று விரைவு ரயிலில் பயணித்த சில பயணிகள் ரயிலில் உள்ள கேண்டினில் குடிநீர் பாட்டில் வாங்கிச் சென்ற நிலையில் அவர்கள் வாங்கிய பாட்டில் தண்ணீரில் இருந்து மது வாடை வீசியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

'ரயில் நீர்' என விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டிலில் இருந்து ஆல்கஹால் வாடை வீசியதாக அங்கிருந்த சில பயணிகள் புகார் கொடுத்தனர். மேலும் அங்கிருந்த புகார் புத்தகத்திலும் தங்களுடைய புகாரை எழுதியுள்ளனர். கடந்த ஒரு வருடமாகவே இதுபோன்ற ஐ.ஆர்.சி.டி.சியின் 'ரயில் நீர்' பாட்டிலில் மது வாடை வீசுவதாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில், தற்போது இன்று கேண்டீன் ஊழியர்களிடம் ரயில் பயணிகள் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளும் வெளியாகி இருக்கிறது.

Advertisment
water Train
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe