jj

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் மீது மது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் மர்ம நபர் ஒருவர் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய பகுதிக்கு வந்துள்ளார். தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திற்குள் நுழையும் முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்து பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். உடனடியாக போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மது போதையில் இருந்த நபர் போலீசார் வருவதை அறிந்து திடீரென கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை தூக்கி வீசியதோடு 'மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு' எனக் கோசமிட்டுள்ளார். உடனடியாக அந்த நபரை பிடித்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த போது, அவர் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த கோவர்தனன் என்பது தெரியவந்தது.

Advertisment

கோவர்தன் முன்னாள் அதிமுக நிர்வாகி என்பதும் தற்போது எந்த பொறுப்பிலும் இல்லை என்பதும் தெரிய வந்தது. எதற்காக மது பாட்டில் வீசப்பட்டது என நடத்தப்பட்ட விசாரணையில் 'மதுவினால் வீட்டில் பிரச்சனை ஏற்படுவதாகவும், மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு' எனவே உடனடியாக திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்என மதுபாட்டிலை வீசியதாக தெரிவித்துள்ளார். அதிகாலையில் நிகழ்ந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.