Advertisment

தனக்கு தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்துகொண்ட நபர்! 

Alcohol addicted person passes away in Erode

ஈரோடு, சூளை பகுதி அருள் வேலவன் நகரைச் சேர்ந்தவர் 45 வயது ராஜேந்திரன். தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். ராஜேந்திரனுக்கு மதுக் குடிக்கும் குடிப்பழக்கம் தொடர்ந்து இருந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். வேலை செய்து கிடைக்கும் பணத்தை முழுமையாகக் குடித்து முடித்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவது வழக்கம். பணம் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ளவர்களிடம் குடிப்பதற்குப் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவ்வப்போது மிரட்டியும் வந்துள்ளார்.

Advertisment

அவருக்கு அவரது குடும்பத்தினர் புத்திமதி சொல்லி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராஜேந்திரன் குடிப்பதற்காக வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மறுத்ததால் வீட்டில் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று அவரது வயிற்றில் அவரே கத்தியால் குத்தி உள்ளார். இதனால் அவரது வயிறு பகுதி கிழிந்து ரத்தம் வெளியேறியது. இதில் உயிருக்குப் போராடிய ராஜேந்திரனை அருகே உள்ளவர்கள் உதவியுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe