Advertisment

சங்கிலி கருப்பசாமிக்கு மதுபான அபிஷேகம்

Alcohol Abhishekam for Sangi Karuppasamy

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் அருகே இருக்கும் ராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு கோவில் அமைந்துள்ள 15 அடி உயரம் உள்ள சங்கிலி கருப்புசாமிக்கு சந்தனம் மஞ்சள், தயிர், இளநீர், பால், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

சந்தன கருப்பு சாமிக்கு செவ்வந்தி மாலை மற்றும் மதுபானம் அபிஷேகம் செய்து மதுபானங்களால் அலங்கரிக்கப்பட்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்து ஆளுயரதீபத்தால் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கிடா வெட்டி கருணை இல்ல குழந்தைகளுக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது .இந்த சிறப்பு பூஜையில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Festival TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe