Skip to main content

''அலாரம் வெளியில் கேட்க வேண்டிய அளவிற்கு இருக்க வேண்டும்'' - நகைக்கடை கொள்ளை குறித்து கூடுதல் கமிஷனர் அன்பு பேட்டி

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

 "The alarm should be loud enough to be heard outside" - Additional Commissioner of Police Anbu Pati on jewelery shop robbery

 

சென்னையில் நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் மிஷினால் வெட்டி கடையில் இருந்த 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் மதிப்புள்ள வைரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசித்து வருபவர் நகைக்கடை அதிபர் ஸ்ரீதர்(36). இரண்டு மாடிகள் கொண்ட இவரது வீட்டின் இரண்டாவது தளத்தில் ஸ்ரீதர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். முதல் தளத்தில் ஜே.எல் என்ற பெயரில் கடந்த 8 வருடங்களாக நகைக்கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில், நேற்று இரவு நகைக்கடையில் வியாபாரம் முடிந்து ஊழியர்கள் கடையைப் பூட்டி சாவியை ஸ்ரீதரிடம் கொடுத்துச் சென்றனர். இன்று காலை சுமார் 9 மணியளவில் ஸ்ரீதர் கடையைத்  திறப்பதற்காக வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க ஷட்டர் வெல்டிங் மிஷினால் வெட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உள்ளே சென்று பார்த்தபோது, கடையினுள் இருந்த லாக்கர் ரூம் கதவை வெல்டிங் மிஷினால் கட் செய்து உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகள், 20 லட்சம் மதிப்புள்ள வைரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

 

மேலும், கடையில் இருந்த சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. உடனே ஸ்ரீதர் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''அலாரம் வெளியில் கேட்க வேண்டிய அளவிற்கு இருக்க வேண்டும். சர்ப்ரைஸான இடங்களில் தொட்டால் கண்டிப்பாக அடிக்கும் அலாரத்தை வெளியில் தெரியும் அளவிற்கு நகைக்கடைகளில் பிக்ஸ் பண்ண வேண்டும் என பலமுறை வலியுறுத்திச் சொல்லி உள்ளோம். உங்கள் மூலமாகவே பல தகவல்களை கொடுத்திருக்கிறோம். மேற்கொண்டு நடக்கக்கூடிய சம்பவங்களில் சிரத்தை எடுத்து மீண்டும் ஒரு மீட்டிங் போட்டு இதை சொல்வோம். இந்த பகுதி எப்பொழுதுமே வாகனத் தணிக்கை நடக்கக்கூடிய இடம். ரெகுலராக போலீஸ் செல்கின்ற இடம் என்று அவர்களே சொல்கிறார்கள். எந்த கேப்பில் இந்த திருட்டு நடந்தது என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் கண்டுபிடித்து விடுவோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

திருட்டு நகையை வாங்கி உருக்கியதாக புகார்;  வியாபாரிகள் சங்கத்தினர் சாலை மறியல்

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Complaint of buying stolen jewelry and melting it;  Traders' Association blocked the road

சிதம்பரத்தில் திருட்டு நகை வாங்கி உருக்கியதாக 3 பேரை ஈரோடு போலீஸார் சனிக்கிழமை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால், இதனை கண்டித்து நகை வியாபாரிகள் சங்கத்தினர் சனிக்கிழமை இரவு மேலரத வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு பகுதியில் உள்ள நீதிபதியின் வீட்டில் 2 கிலோ தங்கம் மற்றும் ரூ 45 லட்சம் பணம் கடந்த ஒரு வாரத்தில் முன்பு திருடு போகி உள்ளது பின்னர் இது குறித்து காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் சம்பந்தப்பட்ட திருடனை கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட திருடனிடம் விசாரணையில்   திருடியது ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து ஈரோடு காவல்துறையினர்  (cr. no. 181/24) குற்ற வழக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பின்னர் நகைகளை சிதம்பரத்தில் உள்ள நகை வியாபாரிகளிடம் குறைந்த விலையில் விற்பனை செய்ததாக நகையைத் திருடியவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பெயரில் ஈரோடு காவல்துறையினர் சனிக்கிழமை காலை முதல் சிதம்பரத்தில் நோட்டமிட்டு சிதம்பரத்தில் நகைக்கடைகள் உள்ள காசு கடைத்தெருவில் நகைக்கடை வைத்துள்ளவர்கள் மற்றும் நகையை உருக்கி தங்கக் கட்டிகளாக விற்பனை செய்பவர்களாக உள்ள , கலியமூர்த்தி மகன் சி.கே.முருகன், பாபுராவ் சேட் மகன் மோகன் பாபு, மாரியப்பன் மகன் சிவக்குமார், நகைகளை வாங்கும் புரோக்கர் ரமேஷ் ஆகிய 4 பேரை சனிக்கிழமை விசாரணைக்கு ஈரோடு அழைத்து சென்றார்கள்.  இதையடுத்து நகை வியாபாரிகள் சங்கத்தினர் தங்களிடம் தகவல் தெரிவிக்காமல் அழைத்து சென்றதை கண்டித்து நகை கடைகளை அடைத்து விட்டு சனிக்கிழமை இரவு மேலரத வீதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏஎஸ்பி பி.ரகுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் வாபஸ் பெறப்பட்டு வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மறியல் போராட்டத்தினால் நான்கு வீதிகளிலும் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

20 நிமிடமாக சாலையில் காத்திருந்த பொதுமக்கள் திருட்டு நகை வாங்கி வியாபாரம் செய்பவர்களுக்கு சிதம்பரம் நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதுபோன்று கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவிப்பதால் இது போன்ற திருட்டு அதிகமாக நடக்க வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத சிதம்பரம் நகை வியாபாரிகள் திருட்டு நகையை வாங்குபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களே இதற்காக நாம் சாலையில் காத்துக் கிடக்கிறோமே என தலையில் அடித்துக் கொண்டனர். 

Next Story

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பரபரப்பு; அதிகாலையில் என்கவுன்டர்?

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Hype over the Armstrong case; An early morning encounter?

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது எப்படி என்பது தொடர்பாக 11 பேரையும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்த பொழுது இன்று காலை 5 மணி அளவில் மாதாவரம் ஏரிக்கரை பின்புறம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது போலீஸ் காவலில் இருந்து திருவேங்கடம் (33 வயது) தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. தப்ப முன்ற திருவேங்கடத்தை போலீசார் சுட்டதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கி குண்டடியுடன் தப்பிய திருவேங்கடம் தற்போது உயிருடன் உள்ளாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது தொடர்பாக போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நிகழ்ந்த சம்பவம் இந்த கொலை வழக்கில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.