அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17- ஆம் தேதிக்கு மாற்றம்!

Alankanallur Jallikattu shifted to January 17!

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17- ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, அலங்காநல்லூர் போட்டி நடைபெறும் ஜனவரி 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அன்றைய தினம் போட்டிகள் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை வேறு தேதிக்கு மாற்றுவது குறித்து விழாக் குழுவினருடன் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டது.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், ஜனவரி 16- ஆம் தேதி அன்று நடக்கவிருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17- ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜனவரி 16- ஆம் தேதி முழு ஊரடங்கு என்பதால் தேதி மாற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

Alanganallur jallikattu madurai
இதையும் படியுங்கள்
Subscribe