Advertisment

ஆலங்குடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரடைப்பால் மரணம்

sn

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை சேர்ந்தவர் சண்முகநாதன். சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே அதிமுக மீது பற்றுள்ளவராக இருந்தார். மேலும் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து வறுமையின் பிடியில் தந்தை மற்றும் அண்ணன்களின் உதவியுடன் சட்டப்படிப்பை முடித்த முதல் பட்டதாரி.

Advertisment

இளம் வழக்கறிஞரான இவர் அதிமுக சார்பில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட ஜெ. வாய்ப்பு கொடுத்தார். 1991ம் ஆண்டு முதல் 1996 ம் ஆண்டு வரை ஆலங்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு கட்சி பணிகளில் அதிக ஈடுபாடு காட்டாத அவர் திருச்சி பகுதியில் திருமணம் செய்து கொண்டு வழக்கறிஞர் தொழில் புரிந்து வந்தார். திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர் நேற்று இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். மறைந்த சண்முகநாதக்கு சசிகலா என்ற மனைவியும் முத்துராமலிங்கம் என்ற மகனும் உள்ளனர்.

Advertisment

மாரடைப்பால் மரணமடைந்த சண்முகநாதன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால் திடீரென திட்டம் மாறியதால் திருச்சியிலேயே அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

sanmuganathan MLA Alangudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe