உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7.00மணிக்குதுவங்கியது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டு வருகிறது. உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7.00மணிக்குதொடங்கியுள்ளது.
முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர், அமைச்சர் மூர்த்தி ஆகியோ கொடி அசைத்து அலங்காநல்லூர்ஜல்லிக்கட்டைதுவக்கிவைத்தனர். முதலில் முனியாண்டி கோயில் காளைஉள்ளிட்டகிராம கோயில் காளைகள்வாடிவாசலில் இருந்துஅவிழ்த்துவிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து போட்டி காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
இதில் 700 காளைகளுடன், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.கரோனாபரிசோதனை செய்துநெகடிவ்சான்றிதழ் வைத்துள்ள காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்கஅனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டபோலீசார்பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ உதவிக்காக 108ஆம்புலன்ஸ்வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. போட்டியில் ஒரு சுற்றுக்கு 30 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.போட்டியைகாண்பதற்காக 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் வெல்லும் சிறந்தகாளைக்குதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில்கார்ஒன்று பரிசாக வழங்கப்படவுள்ளது. அதேபோல், சிறந்த மாடு பிடி வீரருக்கு உதயநிதி ஸ்டாலின்எம்.எல்.ஏ. சார்பில்கார்ஒன்று பரிசாக வழங்கப்படவுள்ளது. மேலும், போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசுபரிசாக வழங்கப்படவுள்ளது.