Skip to main content

அழகப்பா பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியீடு!

Published on 13/10/2020 | Edited on 13/10/2020

 

alagappa university final exam results released

 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளின் இறுதி பருவத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

மாணவர்கள் தங்கள் இறுதி பருவத் தேர்வு முடிவுகளை, www.alagappauniversity.ac.in அல்லது http://exam.alagappauniversity.ac.in/result_all.php?id=2 என்ற இணையதளத்தில், தங்களது பதிவு எண்ணைப் பதிவிட்டு அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குரூப் - 2 முடிவு வெளியீடு; டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
TNPSC Notification on Group – 2 result output

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது.

இதனையடுத்து, சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு கடந்த 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி (இன்று) வரை நடைபெற்றது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. 

இந்த நிலையில், குரூப்-2 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில், அதன் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதில், 161 பணியிடங்களுக்கான மதிப்பெண்ணை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

Next Story

அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழா; உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பு?

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Alagappa University. convocation; Minister of Higher Education neglect

அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 34 வது பட்டமளிப்பு விழா இன்று (29.01.2024) நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி பங்கேற்றுள்ளார். அதே சமயம் பட்டமளிப்பு விழாவின் அழைப்பிதழில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை. இதன் மூலம் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அவரிடம் இருந்து 134 பேர் முனைவர்கள் (Phd) பட்டமும், 184 பதக்கம் பெற்ற பட்டதாரிகள் என 348 பேர் நேரடியாக பட்டம் பெற்றனர். சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.