Advertisment

அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழா; உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பு?

Alagappa University. convocation; Minister of Higher Education neglect

Advertisment

அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 34 வது பட்டமளிப்பு விழா இன்று (29.01.2024) நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி பங்கேற்றுள்ளார். அதே சமயம் பட்டமளிப்பு விழாவின் அழைப்பிதழில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை. இதன் மூலம் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அவரிடம் இருந்து 134 பேர் முனைவர்கள் (Phd) பட்டமும், 184 பதக்கம் பெற்ற பட்டதாரிகள் என 348 பேர் நேரடியாக பட்டம் பெற்றனர். சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

rajakannappan convocation Karaikudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe