மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏவான ஏ.கே.போஸ் (69) மாரடைப்பால் காலமானார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் ஏ.கே.போஸ் வசித்து வந்தார். நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே போஸின் உயிர் பிரிந்தது. ஏ.கே.போசின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை இறுதிச்சடங்கு நடக்கிறது. அதற்கு முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிற்பகல் 1 மணியளவில் போஸ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வருகின்றனர். மேலும்,அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும், போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்த விருக்கின்றனர்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் என்பது குறிப்பிடத்க்கது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.எம்.சீனிவேலு வெற்றி பெற்றார். ஆனால் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே அவர் உடல்நலக்குறைவால் காலமானார். பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறங்கிய ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.