நடிகர்கள் என்றாலே ‘ப்ரைவசி’ போய்விடும். தங்கள் இஷ்டத்துக்குப் பொதுவெளியில் நடமாடுவது சிரமம். அதுவும், பிரபல ஹீரோ என்றால் சொல்லவே வேண்டாம். எங்கு சென்றாலும் ரசிகர்கள் மொய்த்துவிடுவார்கள். சட்ட ஒழுங்கு பிரச்சனைகூட ஏற்பட்டுவிடும். அதனாலேயே, சொத்து, புகழ் என சகலமும் இருந்தாலும், தனிமனித சுதந்திரத்தை மட்டும் அவர்கள் இழக்க நேரிடும். இதையெல்லாம் மீறி, சில நேரங்களில் பொது இடங்களில் சாதாரண மனிதர்களைப்போல் உலவுவதற்கு சில நடிகர்கள் தயங்குவதில்லை. ’தல’ என்று ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் அஜித்குமார் அந்த ரகம்தான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z2_38.jpg)
மீண்டும் போனிகபூர் – வினோத் காம்பினேஷனில் நடிக்கிறார் அஜித். அந்தப் படத்தில் அவர் இளமைத் தோற்றத்தில் வருகிறார். அதற்காகத் தன் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அஜித் வீடு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. அதுவே, நடைப்பயிற்சிக்கு அவருக்கு வசதியாக அமைந்துவிட்டது. அதனால், திருவான்மியூர் பீச்சுக்கு அவர் சர்வ சாதாரணமாக வந்துபோகிறார். தன் மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் மற்றும் உதவியாளர் சகிதமாக ‘ஷார்ட்ஸ்’ அணிந்தபடி அஜித் அப்படி ஒரு விசிட் வந்தபோது ரசிகர் ஒருவரின் கேமராவில் சிக்கிக்கொண்டார். அந்தப் புகைப்படம்தான் இது. சமூக வலைத்தளங்களில் இந்த போட்டோ வேகமாகப் பரவி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)