நடிகர் அஜித்குமார் 'ஜிடி-4' எனப்படும் ஐரோப்பிய கார் பந்தயத்தில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
நடிகர் அஜித் குமார் நடிப்பு மட்டுமல்லாதுகார்பந்தயம், துப்பாக்கி சுடுதல் ஆகிய போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான 'குட் பேட்அக்லி' திரைப்படம்வரவேற்பை பெற்றுவரும்நிலையில் பெல்ஜியத்தில்நடைபெற்ற கார் ரேஸில் அஜித்குமார் பங்கேற்றஅணி இரண்டாவது இடத்தை பிடித்துஅசதியுள்ளது.
இதுகுறித்து அவரது மேலாளர்சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில், 'இந்திய மோட்டார் ஸ்போர்ட்டிற்கு ஒரு பெருமையான தருணம்! பெல்ஜியத்தில் உள்ள மதிப்புமிக்க ஸ்பா ஃபிராங்கோர்சாம்ப்ஸ் சர்க்யூட்டில் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் குறிப்பிடத்தக்க P2 போடியம் ஃபினிஷிங்கைப் பெற்றனர். உலகளாவிய பந்தய மேடையில் ஆர்வம், துல்லியம் மற்றும் விடாமுயற்சிக்கு இது ஒரு சான்று' என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னரேகார் பந்தய போட்டி ஒன்றில் அஜித் மூன்றாம் இடம் பிடித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.