style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சேலத்தில் அஜித் ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் நேற்றிரவு ராம்நகர் பகுதியில் இருக்கும் மாநகராட்சி வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையான விஜய், சேலம் மாநகர் மாவட்ட அஜித் ரசிகர் மன்ற தலைவராக உள்ளார். இவர் மீது வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைதாகி, பின்னர் வெளிவந்த நிலையில் ரவுடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.