இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் பெரிய அளவில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏப்ரல் 14- ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு பின்னர் மே 3- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் பிறந்த நாள் மே 1- ஆம் தேதி வரவுள்ளது. வருடா வருடம் அவரது ரசிகர்கள் மே 1- ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடும் நிலையில், இந்த வருடம் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்அஜித் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை எவ்விதம் கொண்டாடுவார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் எப்போதும்பெரிய விழாக்கள், ஆடம்பரங்களைத் தவிர்த்து வந்த நடிகர் அஜித் தற்பொழுது இந்த வருடம் தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடக்கூடாது. டிபி வைப்பது போன்றுகொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் செயல்களையும் செய்யக் கூடாது என ஒரு கோரிக்கை வைத்துள்ளார். இந்தக் கோரிக்கையை அவர் நேராக ரசிகர்களுக்கு வைக்காமல்நடிகரும், இயக்குனருமானஆதவ்கண்ணதாசனின் அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு தன்னுடைய இந்தக் கோரிக்கையைஅவரிடம் தெரிவித்துள்ளார்.இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ள ஆதவ்கண்ணதாசன். நடிகர் தல அஜித், கரோனாதொற்றுஉருவாகியுள்ள இந்தச் சூழலில் ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என அவரது கருத்தைத் தெரிவித்துள்ளார். எனவே அஜித் ரசிகர்களாகியநீங்கள் அதைப் பின்பற்றுவீர்கள் எனக் கருதுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.