இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியுசி, சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisment

aituc erode

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் பிரபாகரன், சம்மேளன மாநில பொதுச் செயலாளர் சின்னசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

Advertisment

ஒருங்கிணைந்த மத்திய சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய பணிகளை மத்திய மோடி அரசு கைவிட வேண்டும், தமிழகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைத்து அனைத்து சுமைதூக்கும் தொழிலாளர்களையும் அதில் உறுப்பினராக்க வேண்டும், சர்வதேச அமைப்பின் பரிந்துரைப்படி தொழிலாளர்கள் அவர்கள் சுமக்கும் எடையின் அளவு 55 கிலோவிற்குள் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பணியிடத்தில் நடைபெறும் விபத்துகளில் உயிரிழக்கும் சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசு குறைந்தபட்சம் 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர். . இதில் ஏஐடியுசி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.