விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை வீரர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள ஆவடியில் விமானப்படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் (வயது 55) என்பவர்‘நாயக்’ ரேங்கில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் பயிற்சி மையத்தின் 8வது கோபுரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது அவர் வைத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் காளிதாஸ் தொண்டையில் 3 குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத்தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.