Advertisment

தங்க கடத்தலில் ஈடுபட்ட விமான நிறுவன ஊழியர்

Airline employee involved in gold theft

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில், இன்று காலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஒரு விமானம் திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பயணி ஒருவர் இருக்கையின் அடியில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்து, விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமான நிறுவன ஊழியர் யுவராஜ் என்பவரிடம் தெரிவித்து, தங்கத்தை வெளியில் கொண்டு வருவதற்காக முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர்.

Advertisment

இந்த நிலையில் இருக்கையின் அடியில் மறைத்து எடுத்து வந்த தங்கத்தை யுவராஜ் தனது காலணியின் அடியில் பவுடர் வடிவில் வைத்து வெளியே எடுத்து வர முயற்சி செய்திருந்தார். இதுமத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வீரர் ஒருவருக்கு தெரிந்தவுடன் அவர்கள் யுவராஜை சோதனை செய்தனர்.அப்போது அவரது காலணியின் உள்பகுதியில் அணியும் சாக்ஸில் மறைத்து சுமார் 2 கிலோ மதிப்பிலான தங்கத்தை வெளியில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்ததை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர். அவர்கள் யுவராஜை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

airport trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe