Airfare hiked manifold; Passengers are shocked

பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாகப் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத்திரும்பி வருகின்றனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என்று அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.

Advertisment

வழக்கமான கட்டணத்தை விட 3 முதல் 5 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த வகையில் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 367 ரூபாயாக இருந்த விமான கட்டணம் பொங்கல் விடுமுறை காரணமாக 17 ஆயிரத்து 262 ரூபாயாக தற்போது உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 315 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 14 ஆயிரத்து 689 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Advertisment

மேலும் சென்னையிலிருந்து சேலம் செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 290 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 11 ஆயிரத்து 329 ரூபாயாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 264 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 11 ஆயிரத்து 369 ரூபாயாக உயர்ந்துள்ளது.