aircel

Advertisment

தமிழகம் முழுவதும் ஏர்செல் நிறுவன நெட்வொர்க் சேவை பெரும்பாலும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல்களில் இன்கம்மிங், அவுட் கோயிங் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

கடலூர், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு நாட்களாக தொலைதொடர்பு சேவை கிடைக்காமல் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதனால் பல ஊர்களில் இருந்து பல பேர் வேறு நெட்வொர்க்கில் இருந்து தொடர்பு கொண்டு ஏர்செல்லில் இருந்து எதற்கும் பேசமுடியவில்லை என்றும், கஷ்டமர் கேருக்கு தொடர்பு கொண்டாலும் போகவில்லை என்றும் ஏர்செல் ஏஜென்சியிடம் தொடர்பு கொண்டால் பெரும்பாலும் ஏஜென்சி கைபேசி நம்பருக்கும் போன் போகவில்லை என்றும் புகார் கூறுகின்றனர்.

Advertisment

பல வருடங்களாக ஏர்செல் நம்பரை பயன்படுத்தி வருவதால் ஏர்செல் நம்பரையே ஆதார், வங்கி, கேஸ் இன்னும் போன்ற பல நிறுவனங்களுக்கு கொடுத்து உள்ளோம். வாட்ஸ் அப்பில் ஏர்செல் நஷ்டத்தில் இயங்குவதாகவும், இதனால் பல மாநிலத்தில் சேவை நிருத்தப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாட்டிலும் இந்த மாதத்திற்குள் சேவை நிருத்தப்படும் என்றும் செய்திகள் உலாவந்து கொண்டிருக்கின்றன.

அதற்கு தகுந்தாற்போல் இரண்டு நாட்களாக ஏர் செல் சேவை மேற்கண்ட மாவட்டங்களில் இருந்து பொது மக்கள் சேவை நின்று விட்டது. இதனால் பெரிதும் மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களும் ஒரு நிமிடங்கள் கூட காலம் தாழ்த்தாமல் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

aircel

Advertisment

இந்நிலையில் புதுச்சேரியிலுள்ள ஏர்செல் அலுவலகத்தை வாடிக்கையாளர் முற்றுகையிட்டனர். மாற்று ஏற்பாடுகள் செய்வதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.

இதேபோல், கோவை, திருப்பூர், மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஏர்செல் நிறுவன நெட்வொர்க் சேவை பெரும்பாலும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல்களில் இன்கம்மிங், அவுட் கோயிங் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்.

ஈரோட்டில் நூற்றுக்கணக்கான ஏர்செல் வாடிக்கையாளர்கள் கடும் கோபத்துடன் இன்று ஏர்செல் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

இதனால் பதட்டம் ஏற்பட போலீசார் குவிக்கப்பட்டனர். ஏர்செல் அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் கேட்கும் வேறு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மாற்றி கொடுக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.

- சுந்தரபாண்டியன், ஜீவாதங்கவேல்