Published on 03/11/2023 | Edited on 03/11/2023

டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று டெல்லியில் பல இடங்களில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதால் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காற்று மாசு காரணமாக டெல்லியில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. டெல்லியில் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பிற்காக அங்குள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தேவையற்ற கட்டட வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லியில் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் மக்கள் மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.