Advertisment

''எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்'' - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!  

 aiiems Hospital should start work soon '' - Chief Minister's letter to the Prime Minister!

இந்திய பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு எய்ம்ஸ்மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்காக தலைவர், செயல் இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல்எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சில குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து எந்த ஒரு பணிகளும் நடைபெறாத நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு மு.க .ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் பணிகளை செயல்படுத்த அலுவலர்களுக்கும் முழு அதிகாரங்களைக் கையளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

letter madurai aims modi stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe