Advertisment

'இது அரசியல் தற்கொலை முடிவு'- எம்பி ஜோதிமணி வருத்தம் 

mp

'எந்த தைரியத்தில் அதிமுக அரசியல் தற்கொலை செய்கிறார்கள் என்று தெரியவில்லை' எனகாங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

Advertisment

திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேசுகையில், ''இந்த தேர்தலில் பாஜகவின் பணி என்னவென்றால் அதிமுக என்கின்ற ஒரு பெரிய கட்சியை; மக்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்த ஒரு கட்சியைக் குழிதோண்டி இந்த தேர்தலில் புதைத்து விடுவார்கள். அதுதான் இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவின் ஆகச்சிறந்த பங்களிப்பாக இருக்கும் என நினைக்கிறேன். அதைத்தாண்டியெல்லாம் பாஜக தேர்தலில் வெற்றி பெற முடியாது. இந்த தேர்தலை பொருத்தவரை எப்படி நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றதோ அதேபோல் சட்டமன்றத் தேர்தலிலும் மகத்தான கூட்டணி வெற்றி பெறும் .

Advertisment

பாஜக தமிழ்நாட்டில் வெல்வது நடக்கவே நடக்காது. இப்படி பச்சையாக ஒரு மாநிலத்திற்கு துரோகம் செய்கின்ற அரசாங்கத்தை எப்படி தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறீர்கள். தமிழ்நாடு மக்கள் மட்டுமல்ல இந்திய மக்களே பொதுவாக புத்திசாலிகள் தான். தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் ரொம்ப அதிபுத்திசாலிகளாக செயல்பட்டு இருக்கிறார்கள். சீர்தூக்கிப் பார்க்கின்ற அறிவு தமிழ் மக்களுக்கு எப்பொழுதுமே தெளிவாக இருக்கிறது. அதனடிப்படையில் பாஜக தமிழ்நாட்டில் வெல்லப் போவதில்லை.

அவர்கள் அதிமுகவை அழிக்கப் போகிறார்கள். எந்த கட்சியுடனெல்லாம் பாஜக கூட்டணி அமைத்திருக்கிறதோ அந்த கட்சிகள் எல்லாம் மண்ணோடு புதைக்கப்பட்டு விட்டார்கள். அடுத்து அதிமுகவின் முறை. அதற்காக நான் வருந்துகிறேன். அதிமுக நீண்ட காலமாக தமிழ்நாட்டில் இருந்த கட்சி இப்படி ஒரு தவறான முடிவை எடுத்து உள்ளீர்கள். ஆட்சியில் இல்லை என்றால் கூட ஒரு பிரதான எதிர்க்கட்சியாக இருக்க முடியும். ஆனால் கட்சியையே பாஜகவுடன் சேர்த்து விட்டால் கட்சியை இல்லாமல் போய்விடும். எப்படி இப்படியொருஅரசியல் தற்கொலையில் அதிமுகவினர் ஈடுபடுகிறார்கள் என தெரியவில்லை'' என்றார்.

admk congress DMK ALLIANCE MPS jothimani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe