Advertisment

இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிப்பெரும்: செல்லூர் ராஜூ

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிப்பெரும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Advertisment

முன்னதாக, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும், துரோகிகள் ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்ததை போல டெபாசிட் இழப்பார்கள் என டி.டிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது,

டிடிவி தினகரன் தன்னுடன் இருப்பவர்களை தக்க வைத்துக்கொள்வதற்காக அவ்வாறாக பேசி வருகின்றார். நாங்கள் திமுகவையே ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை, அதுபோலதான் டிடிவி தினகரனனும், இரட்டை இலையும் அம்மாவும் தான் மக்களின் எண்ணம், கடந்த தேர்தலில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றோம். அதேபோல வரும் தேர்தலில் வனத்துறறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது போல ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

sellur raju
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe