தமிழகத்தில்சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கூறி அதிமுகவினர் பேரணியாகச் சென்று ஆளுநரிடம்மனு அளிக்கவுள்ளனர்.
விழுப்புரம், செங்கல்பட்டு பகுதிகளில்விஷச்சாராயம்குடித்து20க்கும்மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம்தமிழகம்முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இதையடுத்து கள்ளச்சாராயவிற்பனையைத்தடுக்க அரசுகடும்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம்தொடர்பாகத்தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்றுஎதிர்க்கட்சிகள்கடும்கண்டனங்களைத்தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர்சைதாப்பேட்டைசின்ன மலையிலிருந்து பேரணியாகச்சென்று ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளனர். இந்த பேரணியில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் பேரணி தொடங்கவுள்ளது.