சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி தமிழகம் திரும்பியுள்ள சசிகலாவின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும்எனவியூகங்கள்வெளியாகி வரும் நிலையில், சென்னைதி.நகரில்தங்கியுள்ள சசிகலாவை இன்று (12.02.2021) சந்தித்த பிறகு செய்தியாளர்களைச்சந்தித்த டி.டி.வி.தினகரன், ''அதிமுகவை மீட்டெடுப்பது என்றைக்கு நடக்கும் என தெரியாது. அதிமுகவை மீட்டெடுக்கத்தான் அமமுகவை ஆரம்பித்தோம். பேசுபவர்கள் பேசட்டும், காலம் அவர்களுக்குப்பதில் சொல்லும்'' என்றார்.
இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு, அதிமுகவைப் பற்றி பேசாமல் திமுகதேர்தலைச் சந்திக்க முடியாது. அதிமுகபாசிட்டிவாக வாக்குகேட்கிறது.திமுக நெகட்டிவாக வாக்கு கேட்கிறது. ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில்தான் அதிமுகதேர்தலைச் சந்திக்கும் எனக் கூறியுள்ளார்.