Advertisment

அதிமுக முன்னாள் அவைத்தலைவர் மதுசூதனின் படத்திறப்பு விழா (படங்கள்)

அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், உடல் நலக்குறைவால் கடந்த (5-8-21) அன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது படத்திறப்பு நிகழ்ச்சி இன்று தண்டையார்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் மறைந்த இ. மதுசூதனனின்படத்தைத்திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி நலிந்த ஏழைகளுக்கு அவரது நினைவாக அன்னதானம் வழங்கினர். இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி, காமராஜ், பா.வளர்மதி, டி.ஜெயகுமார், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisment

admk madhusoodhanan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe