ஊடங்களுக்கு அதிமுக எச்சரிக்கை!!!

அதிமுக கட்சி மற்றும் ஆட்சியை வழிநடத்த ஒற்றை தலைமை தான் சிறந்தது என்றுஎம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியதைத் தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு அதன் தொடர்ச்சியாக எழுந்த விவாதங்கள், என அக்கட்சிக்குள் கலவர குரல் மேலோங்க இதை தடுக்கும் விதமாக மா.செ.க்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், கூட்டம் நேற்றுகாலை 10.30 க்கு அக்கட்சியின் அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று முடிந்தது.

 AIADMK warning to media's

இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கட்சி தலைமையால் அங்கீகரிக்கப்படாதவர்களிடம் ஊடங்கங்கள்கருத்தை கேட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க எங்களை ஆட்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறோம். அதிமுக பெயரை வேறு எந்த வகையிலும்பிரதிபலிக்கும்படி யாரையும் அனுமதிக்க வேண்டாம். அதிமுக பெயரில் அந்த நபர்கள் கொடுக்கும் பேட்டிகள் மற்றும் செய்திகளுக்கு எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

admk media ops_eps
இதையும் படியுங்கள்
Subscribe