Advertisment

அதிமுக VS திமுக- சோசியல் மீடியா வார்

AIADMK VS DMK- Social Media War

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் திமுக அரசுக்குக்கு ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. அந்த சம்பவம் நடந்து ஓராண்டாகியும் இதில் நீதி கிடைக்கவில்லை.

Advertisment

இந்தநிலையில், கள்ளச்சாராய சாவுகள் குறித்து நீதி கிடைக்காததால், சம்பவம் நடந்த ஒராண்டான இன்று அது குறித்து சோசியல் மீடியாக்களில் எதிர்வினையாற்றியது அதிமுக தலைமை. மேலும், ஹேஸ்டாக் மூலம் இதனை தேசிய அளவில் ட்ராண்டிக்கியது அதிமுக ஐ.டி.விங்க் ! காலையிலிருந்து இந்த பரபரப்பை அதிகரிக்கச் செய்தது அதிமுக.

Advertisment

கள்ளச்சாராய சாவு விவகாரத்தை அதிமுக ஐ.டி. விங்க், பரபரப்பாக்கியதை அறிந்த திமுக ஐ.டி. விங்க் நிர்வாகிகள் பதிலடி கொடுக்கத் தொடங்கினர். அதனை எதிர்கொண்டு அதிமுக ஐ.டி.விங்கும் பதிலடி தந்தபடி இருந்தது. மேலும், அதிமுகவினரின் பதிவுகளை நீக்க வைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது திமுக ஐ.டி விங்க்.

இது மட்டுமல்லாமல், யார் பதிவு செய்திருக்கிறார்களோ அவர்களது பதிவுகளுக்குள் சென்று டிஸ்டர்ப் செய்வது என்கிற வேலைகளையும் செய்தனர். இதனால், இரு கட்சிகளின் ஐ.டி.விங்க்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இவர்களுக்குள் நடக்கும் யுத்தத்தால் சோசியல் மீடியா தகித்துக் கொண்டிருக்கிறது.

admk kallakurichi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe