aiadmk

Advertisment

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து தலைக்கு 500, 1000 ரூபாய் என கொடுத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ர.ர.க்கள் அழைத்து வரப்பட்டனர்.

கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதால் சில ர.ர.க்கள் வந்த பேருந்துகள் நந்தனம் செல்ல முடியாமல் மெரினா கடற்கரைக்கு சென்றன. அங்கு ஜெ. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி ர.ர.க்கள், கலைவாணர் அரங்கம் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையில் குவிந்தனர். இவர்கள் நந்தனத்துக்கு செல்லாமலேயே இங்கேயே விழாவை கொண்டாடினார்கள்.