Advertisment

"நீட் தேர்வு ரத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு"- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

publive-image

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று (08/02/2022) காலை 10.00 மணிக்கு சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. அப்போது, நீட் விலக்கு மசோதாவைத் திருப்பியனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

Advertisment

அதைத் தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்து உரையாற்றினார்.

Advertisment

பின்னர், நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று, தங்கள் தரப்பு கருத்துகளைக் கூறினர். அதன் தொடர்ச்சியாக, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று விரிவாகப் பேசினர்.

நீட் விலக்கு மசோதாவுக்கு பா.ஜ.க.வைத் தவிர்த்து, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்டக் கட்சிகள் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வகை செய்யும் மசோதா சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் ஒரு மனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டதாகச் சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், இந்த மசோதாவை இன்றே அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.இதையடுத்து, தமிழக சட்டமன்றக் கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்.

சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டம் முடிந்தப் பின் சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "நீட் விவகாரத்தில் அ.தி.மு.க. மீது வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். நீட் விவகாரத்தில் தி.மு.க. தவறான வரலாற்றைப் பதிவு செய்கிறது.

நீட் தேர்வு தமிழகத்திற்கு வருவதற்கு முழு காரணம் காங்கிரஸ்- தி.மு.க. தான். நீட் தேர்வு கூடாது என்ற நிலைப்பாட்டில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது. சட்டமன்றத்தில் சி.விஜயபாஸ்கரை முழுமையாக பேச விடாதது வருத்தமளிக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு சட்ட ரீதியாக எடுக்கும் நடவடிக்கைக்கு அ.தி.மு.க. ஆதரவாக இருக்கும். உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், மறு சீராய்வு மனு போராட்டத்தால்தான் நீட் தேர்வு வந்தது. நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு அ.தி.மு.க. முழு ஆதரவு அளித்துள்ளது" எனத் தெரிவித்தார்.

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe