AIADMK struggle demanding  construction of a barrage to prevent the intrusion of seawater at Adivaraganallur

தமிழகஎதிர்க்கட்சிதலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி சமீபத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி அதிமுக சார்பாகஆதிவராகநல்லூரில்கடலில்உட்புகுவதைத்தடுக்க தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக தமிழக அரசு தொடங்க அதிமுக சார்பாகபுவனகிரியில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்எனதெரிவித்து இருந்தார்.

Advertisment

அதன்படிபுவனகிரிஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்அருண்மொழித்தேவன்தலைமையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்புவனகிரிஎம்.ஜி.ஆர் சிலை அருகே ஒன்று திரண்டு உடனடியாக தமிழக அரசு வெள்ளாற்றின் குறுக்கே ஆதிவராக நல்லூர் என்ற கிராமத்தில் கடல் நீர்உட்புகுவதைத்தடுக்க தடுப்பணை கட்டவலியுறுத்திக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசுக்கு எதிராக அதிமுகவினர் மற்றும் கிராம மக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Advertisment

மேலும் சேலம் மாவட்டம்கல்வராயன்மலையில் உருவாகும் வெள்ளாறு பெரம்பலூர்வழியாககடலூர் மாவட்டத்தில் பயணித்து மணிமுத்தாற்றுடன் இணைந்துபுவனகிரியைஅடுத்தபரங்கிப்பேட்டைஅருகேவங்ககடலில் கடலில் கலக்கிறது. மேலும்பரங்கிப்பேட்டைஅருகே உள்ள ஆதிவராக நல்லூர்என்னும் பகுதியில் வெள்ளாற்றின்வழியாகக்கடல் நீர் உட்பகுதி சுமார் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது இதனால் நிலத்தடி நீரைவிவசாயத்திற்குகுடிநீருக்கோ பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் 25 இருக்கும் மேற்பட்ட கிராமங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் கடலில்உட்புகுவதைத்தடுக்க வெள்ளாட்டின் குறுக்கே ஆதிவராக நல்லூரில் தடுப்பணை கட்ட கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சுமார் ரூ.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் அதிக உப்பு நீராக மாறிவரும் நிலையில் உடனடியாக தமிழக அரசு அதிமுகஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதிட்டத்தைச்செயல்படுத்த வேண்டும் என்றுவலியுறுத்திக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

இதில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் 25க்கும் மேற்பட்டகிராமங்களைச்சார்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.