
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே தற்போது அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த ஆர்ப்பாட்டமானது அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்ததாக திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த தெய்வச்செயல் என்பவர் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் அரசு எனக் கூறி தற்போது கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணி செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளருமான பா.வளர்மதி கலந்துகொண்டு கண்டன உரையை ஆற்றினார். இதில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொரடா சு.ரவி, மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.ஹரி ஆகியோர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் ஏற்படுவதாக கூறி கண்டன உரை, மற்றும் கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு இருந்தாலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.