Advertisment

அதிமுக செய்தி தொடர்பாளர் பதவி ராஜினாமா.. ஆதரவாளர்கள் மத்தியில் மார்க்கண்டேயன் அறிவிப்பு

அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியை சேர்நதவர். தற்போது அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருப்பவர்.ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர்.

Advertisment

admk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அத்தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார் மார்க்கண்டேயன். ஆனால் மாவட்ட செயலாளரும்,அமைச்சருமான கடம்பூர் ராஜுவின் சிபாரிசின்படி அதிமுக தலைமை சின்னப்பனை விளாத்திகுளம் வேட்பாளராக அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மார்க்கண்டேயன் இன்று காலை 12 மணியளவில் தனது ஆதரவாளர்கள் அடங்கிய கூட்டத்தை தனது இல்லத்தின் அருகிலுள்ள மண்படப்பதில் நடத்தினார்.

அப்போது அவர் தனது ஆதரவாளர்களிடம் நான் ஓபிஎஸை நம்பி போனேன் ஆனால் அவர் எனக்கு உதவவில்லை. அதன் காரணமாக நான் என்னுடைய அதிமுக செய்தி தொடர்பாளர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். மாவட்ட செயலாளரான கடப்பூர் ராஜு கட்சியின் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து தனது ஆதரவாளர் சின்னப்பனை வேட்பாளராக அறிவிக்க செய்திருக்கிறார்.ஆனால் தலைவர் எம்ஜிஆர் இருந்திருந்தால் அமைச்சர்களை கண்டிப்பார். அம்மா இப்போது இல்லை.மாவட்ட செயலாளர் ஒருவர் இப்படி நடந்திருந்தால் அம்மா விமானத்தில் வரும்போதே அவரது பொறுப்பு பறிபோயிருக்கும் என்று பேசினார்.

விளாத்திகுளம் தொகுதியில் கட்சியில் தனக்கென ஒரு ஆதரவாளர்கள் வட்டத்தை கொண்ட மார்க்கண்டேயனின் இந்த அறிவிப்பு அதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் வந்திருந்த தொண்டர்கள்.

admk ops spokesmen
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe