ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈரோடு நந்தா கல்லூரியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மற்றும் நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் இன்று ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமை ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தார். நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம், செயலாளர்கள் பிரதீப், திருமூர்த்தி ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.
இதில் மருத்துவக் குழுவினர் பல்வேறு நோய்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தனர். அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டனர். சளி, காய்ச்சல், சர்க்கரை நோய், தலைவலி, அஜீரண கோளாறு, குடல் புண், பக்கவாதம், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அவர்களுக்கு தேவையான மருந்துகளும்மாத்திரைகளும் வழங்கப்பட்டன. ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார், பெரியார் நகரவைத்தலைவர் மின்ராஜா, முன்னாள் கவுன்சிலர் செந்தில் குமார்,சூரிய சேகர் பிரதிநிதி, கஸ்தூரி, மாதையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.