DMK AIADMK against the government. Struggle!

Advertisment

திமுகஆட்சிக்கு வந்தபின் முதன்முறையாக அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுகஅரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் -டீசல் விலை குறைப்புஉள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்போதைய எதிர்க்கட்சிதுணைத் தலைவரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம்;சேலம் மாவட்டம், சூரமங்கலத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி; கோபிச்செட்டிப்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்; திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்;கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு;சென்னை கே.கே.நகரில் முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.