Advertisment

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களில் வீட்டுவரி, குப்பை வரி, மின் கட்டண உயர்வு என பல்வேறு வரி உயர்வு மற்றும் கட்டண உயர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி மாநில அ.தி.மு.க சார்பில் உள்ளாட்சித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் மற்றும் ஏராளமான அதிமுக கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறையை முற்றுகையிட்டும் அலுவலகம் முன்பு அமர்ந்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.