Advertisment

மீண்டும் போராட்டத்தை தள்ளிவைத்த அதிமுக!

AIADMK postpones struggle again!

Advertisment

அ.தி.மு.க. தலைமைக் கழகம் கடந்த 8 ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், "அ.தி.மு.க. சார்பில், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் 09/12/2021 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வருகின்ற 11/12/2021 அன்று காலை 11.00 மணியளவில், இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்பொழுது மீண்டும்ஒரு அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக அரசுக்கு எதிராக 11 ஆம் தேதி நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் வரும் 17 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admk ops_eps struggle
இதையும் படியுங்கள்
Subscribe