Skip to main content

நன்னிலம் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு அதிகாரிகள் பூட்டு

Published on 06/09/2017 | Edited on 06/09/2017
நன்னிலம் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு அதிகாரிகள் பூட்டு



நன்னிலத்தில் எடப்பாடி அணியினருக்கும், தினகரன் அணியினருக்குமான பிரச்னையால், அதிமுக கட்சி அலுவலகத்திற்கு அதிகாரிகள் பூட்டுப் போட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

அதிமுக  ஜெயலலிதா மறைந்த பிறகு பல அணிகளாக உடைந்து. தற்போது சசிகலா குடும்பத்திற்கு எதிராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஒ.பி.எஸ்-ம்  போர் கொடி தூக்கினர். தினகரனை கட்சியை விட்டு, நீக்குவதாக அறிவித்தனர். கோபம் அடைந்த தினகரன் தனது ஆதரவாளர்களோடு எடப்பாடி அரசுக்கு எதிராக நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். அதோடு, கட்சிப் பொருப்பாளர்களையும் அதிரடியாக நீக்கிவிட்டு தங்களின் ஆதரவாளர்களையே நியமித்துவருகின்றனர்.

அந்த வகையில், திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்த அமைச்சர் காமராஜை நீக்கிவிட்டு திவாகரனின் விசுவாசியான எஸ், காமராஜை நியமித்தனர். "என்னோட பொறுப்பை எடுக்க தினகரன் யாரு, அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என, தனது ஆதரவாளர்களோடு கட்சி அலுவலகங்களில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்தார் அமைச்சர் காமராஜ். புதிதாக பொறுப்பேற்ற தினகரன் ஆதரவு மா.செ காமராஜ், மன்னார்குடியில் தனது ஆதரவாளர்களோடு, ஊர்வலமாக சென்று தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து, தனது ஆதரவாளர்களின் பலத்தை காட்டினார். அன்றைக்கே மன்னார்குடி கட்சி அலுவலகத்தையும் கைப்பற்றும் முயற்சியில், ஈடுபட முயன்று காவல் துறையின் எச்சரிக்கையால் பிரச்சனையின்றி பேரணி முடிந்தது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தங்களின் ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார் புதிய மா.செ.எஸ்.. காமராஜ். 4ம் தேதி மாலை குடவாசல் நகர அலுவலகத்திற்கு வந்துவிட்டு, நன்னிலம் அலுவலகத்திற்கு வந்தார். அங்குள்ள ஆதரவாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அதிமுக எடப்பாடி அணி ஓ.செ.க்களான குணசேகரன், அன்பு, சேர்மனாக இருந்த சம்பத், ஆகியோர்தங்கள் ஆதரவாளர்களோடு எட்டு காரில் கூட்டமாக வந்து அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர், இந்த செய்தி தாசில்தாருக்கும், நன்னிலம், காவல்துறைக்கும் தெரிய வர  பிரச்சினை வராமல், தடுத்து, இரண்டு தரப்பையும் வெளியேற்றி போலீஸ் பாதுகாப்பு போட்டனர்.

இந்த நிலையில் இன்று மதியம் திருவாரூர் ஆர்.டி.ஓ முத்துமீனாட்சி இரண்டு தரப்புக்கும் அனுமதியில்லை என பூட்டுப் போட்டனர். அலுவலகம் தங்களுக்கே சொந்தம், அதற்கான ஆதாரம், டாக்மன்ட் எங்களிடம் இருக்கிறது. நீதிமன்றம் மூலம் மீண்டும் மீட்போம், என்கிறது தினகரன் தரப்பு. கட்சியும், ஆட்சியும், எங்களுடையது அலுவலகமும் எங்களுக்கே சொந்தம். என்று வறிந்து கட்டி நிற்கிறது எடப்பாடி தரப்பு. எந்த அணியையும் பார்க்காமல் எம்.ஜீ.ஆரையும், ஜெயலலிதாவையும் மட்டுமே தலைவராக கொண்டு அ.தி.மு.க வை நன்னிலம் தொகுதியில் வளர்த்த முன்னாள் ஒ செ கன்னையனால் உறுவாக்கப்பட்ட அலுவலகம் சம்மந்தமே இல்லாதவர்களால் இன்று பூட்டுப் போட்டு விட்டார்களே என்கிறார்கள் பழைய அதிமுகவினர். 

க.செல்வகுமார்.

சார்ந்த செய்திகள்