AIADMK official passed away mysteriously in Salem

சேலம் அருகே பாப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரவி(49). அதிமுக கிளை செயலாளராக இருந்து வந்த ரவி, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில், ரவி இரவு நேரத்தில் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

Advertisment

அந்த வகையில் நேற்று இரவு வழக்கம் போல் ரவி நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ரவி வீடு திரும்பவில்லை. ரவி தாமதமாக வீட்டிற்கு வருவார் என்று கருதிய குடும்பத்தினர் அவரை தேடாமல் விட்டுவிட்டனர். இந்த நிலையில் இன்று காலை பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டின் முன்பு ரவியின் உடல் கிடந்துள்ளது. இதனைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரவியின் உடலிலும், தலையிலும் லேசான காயங்கள் இருந்தால், அவரை யாரேனும் கொலை செய்தனரா? அல்லது நடைப்பயிற்சியின் போது தடுமாறி கீழே விழுந்தாரா? என்று கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.