AIADMK office key issue; OPS's appeal to the Supreme Court will be heard today

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்.

Advertisment

ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த பின் இதற்கு பதில் மனு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

அந்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் அடிப்படை உறுப்பினர் இல்லை. எனவே கட்சி அலுவலகத்தின் அதிகார உரிமையைக் கோர முடியாது. மேலும் கட்சியின் தலைமை அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க கூறுவதில் எந்தவொரு முகாந்திரமும் இல்லை.

பண விவகாரங்களில் கையாடல் செய்த ஒருவரிடம் அலுவலக சாவியை ஒப்படைக்கக் கூடாது. அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் கட்சிக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட ஒருவர் தலைமை அலுவலக நிர்வாக உரிமையைக் கோர முடியாது. எனவே, அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என இபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த மனு விசாரணைக்கு வர உள்ளது.