Advertisment

அதிமுக மா.செ. கூட்டம்; தேதி அறிவிப்பு

AIADMK M.S meeting; Notification of date

Advertisment

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அதிமுகவின் 'பொன்விழா எழுச்சி மாநாடு'மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டைத் தொடர்ந்து அடுத்தபடியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்த அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாநாட்டை நடத்துவதற்கு அமைக்கப்பட்டிருந்த குழுவினருடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. கொடநாடு விவகாரம், அண்ணாமலையின் பாத யாத்திரை, இந்தியா கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும்ஆலோசிக்கப்படலாம்என்றும் கூறப்படுகிறது.

admk edapadipalanisamy meetings
இதையும் படியுங்கள்
Subscribe