









தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி, செய்தித்துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. முதலில் கேள்வி நேரம் ஆரம்பிக்கப்பட்ட உடனே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களின் தொகுதி சார்ந்த பிரச்சனை பேசினார்கள். அதற்கு அமைச்சர்கள் பதிலளித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள். பேரவையிலிருந்து வெளியே வந்த அவர்கள், யாரும் எதிர்பாராத வகையில் கலைவாணர் அரங்குக்கு வெளியே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.