ADVERTISEMENT

இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

07:51 AM Aug 13, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தாக்கலாகும் இ-பட்ஜெட்டை கணினி திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடக்க இருக்கிறது. சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ்- இபிஎஸ் தலைமையில் நடைபெற இருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT