அதிமுக பெண் எம்எல்ஏவுக்கு கரோனா உறுதி!

ுபர

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்நோய் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.

தமிழகத்தை பொறுத்த வரையில் கரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகின்றது. அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. சட்டமன்ற உறுப்பினர்களில் முதலில் திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி சில வாரங்களுக்கு முன் மரணமடைந்தார். அடுத்து தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மஸ்தான், கணேசன், கீதா ஜீவன்,காந்தி, செங்குட்டுவன் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். சிலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மற்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த மணச்சநல்லூர் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus
இதையும் படியுங்கள்
Subscribe