அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத் தோல்வி!

AIADMK Minister MC Sampath defeated!

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 157 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 77 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னனியில் உள்ளது.

இந்நிலையில் கடலூரில்அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் தோல்வியை சந்தித்துள்ளார். திமுக வேட்பாளர் அய்யப்பன்84,563 வாக்குகளும், அதிமுகவேட்பாளர் எம்.சி.சம்பத் 79,412 வாக்குகளும் பெற்றுள்ள நிலையில் 5,151 வாக்கு வித்தியாசத்தில் எம்.சி.சம்பத் தோல்வியடைத்துள்ளார்.

Cuddalore minister mc sampath tn assembly election
இதையும் படியுங்கள்
Subscribe