
கடலூர் மாவட்டத்தில் மாணவிக்கு நடந்த கொடுமையை கண்டித்து அதிமுகவினர் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கைது செயப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமையை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுநல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதிமுகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். இதில் சிதம்பரத்தில் அதிமுக எம்.எல்.ஏ பாண்டியன் தலைமையிலும், கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையிலும், விருதாச்சலத்தில் புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ அருள்மொழி தேவன் தலைமையிலும், குறிஞ்சிப்பாடி அதிமுக மாவட்டச் செயலாளர் சொரதூர் ராஜேந்திரன் தலைமையிலும் 1000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.