Advertisment

பேரவைக்கு கருப்பு சட்டையில் வந்த அதிமுகவினர்

 AIADMK members in black shirts

Advertisment

கோப்புப்படம்

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து நடைபெற்று வரும் சட்டப்பேரவை தொடர் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவினர் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச முயன்றும் சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்துவெளிநடப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பேரவையில் மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி கொடுக்க மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்து இந்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

admk edappadi pazhaniswamy tn assembly
இதையும் படியுங்கள்
Subscribe